News June 14, 2024
இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள், நாளை (15ஆம்தேதி) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து 19ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுக எங்கே சென்றது?

பாக்., ஆதரவுடன் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதி காத்ததாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்புடன் கமேனி கொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், சாதாரண மக்கள் போராடினாலே கைதுசெய்யப்படும் நிலை உள்ளது என்றார். மேலும், திமுக எப்போதும் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் செய்வதாகவும் சாடியுள்ளார்.
News March 2, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹920 குறைந்தது

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 2, 2026
திமுகவின் நிபந்தனையால் அதிருப்தியில் வைகோ?

வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறாராம் வைகோ. ஆனால் 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


