News December 30, 2024
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் என்றாலே இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வழிபடுவர். டிசம்பர் 26ஆம் தேதி மண்டல கால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட நிலையில், இன்று மகர பூஜைக்காக திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
மூக்கை நுழைக்கும் 3-வது நபர்: திமுக, விசிக சாடல்

ADMK பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், EPS-ஆல் நீக்கப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சி தலைவரை பஞ்சாயத்துக்கு அழைக்கும் அதிமுகவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என உதயநிதியும் சாடியுள்ளார்.
News September 10, 2025
உடம்பை இரும்பாக்கும் விதைகள்.. நோட் பண்ணுங்க பா!

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மட்டுமே பலர் சாப்பிடுவார்கள். ஆனால், Healthy Diet-க்கு சில விதைகளும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விதைகள், ரத்த அழுத்ததை குறைப்பதில் இருந்து புற்றுநோயை கூட வராமல் தடுக்குமாம். அப்படி மனிதனுக்கு அருமருந்தாகும் விதைகள் குறித்தும் அதன் பலன்கள் பற்றியும் போடோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
News September 10, 2025
மூலிகை: பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும்.
*ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
*லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
*பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it to friends.