News April 15, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் சபரிமலை ‘மை’ சாந்து

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News November 17, 2025
BREAKING: நடிகர் அஜித் வீட்டில் பதற்றம்

முதல்வர் ஸ்டாலின் வீட்டைத் தொடர்ந்து, நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, போலீசார் அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பாதுகாப்புக்காக அஜித் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
News November 17, 2025
BJP-க்கு விஜய் ஆதரவளித்து விடக்கூடாது: துரை வைகோ

SIR-க்கு எதிராக நேற்று தவெக நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கட்சிப் போராட்டங்களில் விஜய் நேரடியாக கலந்து கொண்டால் தான், அவரது தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். கொள்கை எதிரியாக தவெக அறிவித்துள்ள பாஜக தமிழகத்தில் நுழைவதற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜய் ஆதரவளித்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
News November 17, 2025
லப்பர் பந்து தெலுங்கு ரீமேக்கில் ரம்யா கிருஷ்ணன்

‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடலை மீண்டும் டிரெண்ட் செட் செய்த படம் ‘லப்பர் பந்து’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் கூட விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதன் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளன. அனி ஐ.வி.சசி இயக்கும் இப்படத்தில் கெத்து தினேஷ் ரோலில் ராஜசேகர், யசோதாவாக ரம்யா கிருஷ்ணன், துர்காவாக ஷிவாத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர்.


