News May 24, 2024
WI எதிரான டி20 போட்டியில் SA அணி தோல்வி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. முதலில் களமிறங்கிய WI அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பிராண்டன் கிங் 79 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய SA அணி, 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 3 போட்டி கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் WI முன்னிலையில் உள்ளது.
Similar News
News August 17, 2025
அப்படி சொல்லவே இல்ல: அந்தர் பல்டி அடித்த அஸ்வின்

CSK அணிக்கு டெவால்ட் பிரேவிஸ் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து CSK வீரர் அஸ்வின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு <<17426625>>CSK விளக்கமும்<<>> அளித்திருந்தது. இந்நிலையில், அஸ்வின் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். பிரேவிஸ் விவகாரத்தில் பிசிசிஐ விதிகளை CSK மீறியதாக நான் சொல்லவில்லை, யார் மீதும் தவறில்லை எனக் கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார் அஸ்வின்.
News August 17, 2025
கவர்னர் R.N.ரவியை மாற்றக் கூடாது.. ஸ்டாலின்

தமிழ்தாய் வாழ்த்தை மதிக்காத R.N.ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் கவர்னர் கம்பு சுத்தலாம், தமிழ்நாட்டில் கம்பு சுத்த கூடாது எனக் கூறிய அவர், R.N.ரவி தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும், அப்போதுதான் தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வார் எனத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு எதிராக சிலர் அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும் சாடினார்
News August 17, 2025
ராமதாஸே பாமக தலைவர்: தீர்மானம் நிறைவேற்றம்

ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதல் தீர்மானமாக, ராமதாஸே கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவார் என கட்சியின் கெளரவத் தலைவர் GK மணி தெரிவித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.