News November 5, 2025

SA-க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

image

SA-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. IND vs ENG டெஸ்ட் தொடரின் போது, காயம் காரணமாக விலகிய துணை கேப்டன் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அதேவேளையில், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணி: *கில் *பண்ட் *சாய் சுதர்சன் *ஜெய்ஸ்வால் *ராகுல் *படிக்கல் *ஜுரெல் *ஜடேஜா *வாஷிங்டன் சுந்தர் *பும்ரா *அக்சர் *நிதிஷ்குமார் *சிராஜ் *குல்தீப் *ஆகாஷ் தீப்.

Similar News

News November 5, 2025

நடிகை கனகாவுக்கு நடந்த துயரம்.. ராமராஜன் உருக்கம்

image

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

News November 5, 2025

இந்தியாவுக்கு உதவ முன்வந்த சீனா!

image

டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, காற்று தர குறியீடு (AQI) 293-ஆக உள்ளது. இந்நிலையில், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேபோன்றதொரு சூழலை தாங்களும் சந்தித்ததாகவும், அதில் இருந்து மீண்ட அனுபவங்களை பகிர தயாராக இருப்பதாக கூறி, அது தொடர்பான சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

News November 5, 2025

BREAKING: கூண்டோடு அதிரடி கைது

image

சென்னையில் வீடு ஒன்றில் போதை மாத்திரை விற்பனை செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புழல் பகுதியில் போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலமாக செலுத்தி கொண்ட கல்லூரி மாணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட கும்பலிடம் 300 மாத்திரைகளும் சிக்கியுள்ளன.

error: Content is protected !!