News September 10, 2025

செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

image

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

சென்னையில் ரயில் பெட்டி கண்காட்சி

image

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் மார்ச் 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 125 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம், புதிய மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

News March 4, 2026

தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கும் தமிழக காங்கிரஸ்

image

டெல்லி தலைமையிடம் இருந்து அறிக்கை வந்ததும், அறிவாலயத்தில் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூட்டணியில் இழுபறியோ, பிரச்னையோ இல்லை; கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என கூறினார். திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று உறுதியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் காலதாமதம் நீடிக்கிறது.

News March 4, 2026

முகத்தில் ஆங்காங்கே கருப்பா இருக்கா? DO THIS

image

நம்மில் பலருக்கு முகத்தில் பிக்மெண்டேஷன் பிரச்னை இருக்கிறது. இதனால் முகத்தை வெளியில் காட்டவே சிலர் தயங்குகின்றனர். கவலை வேண்டாம். இதனை சரிசெய்ய ABC ஜூஸ் உதவும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு பாதி ஆப்பிள், ஒரு கேரட், பாதி பீட்ரூட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்று அரைத்து வடிகட்டி குடியுங்கள். இதை தினமும் ஒரு கிளாஸ் குடித்தால் பிக்மெண்டேஷன் பிரச்னை சரியாகும். SHARE.

error: Content is protected !!