News May 15, 2024
நான்காவது இடத்தில் கலக்கும் ரியான் பராக்

ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரியான் பராக் 4ஆவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடி வருகிறார். ஐபிஎல்லில் 4ஆவது வீரராக களமிறங்கி 500 ரன்களுக்கும் மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட்(579), ரோஹித் ஷர்மாவுக்கு (538) அடுத்தபடியாக 531 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கோலி, ருத்ராஜுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
Similar News
News December 20, 2025
இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

U19 ஆசிய கோப்பையில் அரையிறுதியில் இலங்கையை தோற்கடித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றிலேயே பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்தியா கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.
News December 20, 2025
பாரம்பரிய மருத்துவத்தில் யோகாவும் உள்ளது: PM மோடி

பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது WHO சர்வதேச உச்சிமாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய PM மோடி, உலகம் முழுவதும் ஆரோக்கியம், சமநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பாதையை யோகா காட்டியுள்ளதாக கூறியுள்ளார். பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யோகாவின் மேம்பாட்டிற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் தான் பாராட்டுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
News December 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 20, மார்கழி 5 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


