News April 6, 2025
ரஷ்யாவின் தாக்குதல்: US மீது ஜெலன்ஸ்கி காட்டம்

ரஷ்யாவின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் விமர்சனம் பலவீனமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். இதற்கு, வலிமையான நாடான அமெரிக்காவின் கருத்து பலவீனமாக உள்ளதாக ஜெலன்ஸ்கி சாடியுள்ளார்.
Similar News
News April 12, 2025
ஏன் 9வது விக்கெட்டுக்கே வருகிறார் தோனி?

அணி ரன் இல்லாமல் தவிக்கிறது. அஸ்வின், தீபக் ஹூடா இறங்கியப்பிறகே, 9வது விக்கெட்டுக்கு களமிறங்குகிறார் தோனி. இது மோசமில்லையா? ஃபார்மில் இல்லாத வீரரும், பவுலரும் ஏன் அவருக்கு முன்னாடி இறங்கணும். ஏன் இப்படி செய்கிறார் தோனி? என ஒரு தரப்பு நெட்டிசன்கள் கொதித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பு அவருக்கு எப்படி விளையாடணும் எனத் தெரியும் என்றும் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News April 12, 2025
மீண்டும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் கூகுள்!

தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் கூகுள் நிறுவனம் மீண்டும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. Android, Pixel Phones, Chrome பிரவுசர்களில் பணியாற்றுவோரை குறைத்து வருகிறது. கூகுள் பணி நீக்கம் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு 2023ல் 12,000 பணியாளர்களை நீக்கியது. இதே போல் கடந்த 2024ல் தானாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் திட்டத்தையும் அறிவித்தது.
News April 12, 2025
இன்று அனுமன் ஜெயந்தி… இப்படி வழிபடுங்கள்…

இன்று அனுமன் ஜெயந்தி, அதுவும் சனிக்கிழமையில் வந்துள்ளது கூடுதல் சிறப்பு. இன்று, வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று மனதார பிரார்த்தியுங்கள். மேலும், 27 வெற்றிலையை மாலையாக கோர்த்து அதனை அனுமனுக்கு அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அவரிடம் வையுங்கள். உங்களுக்கான நல்வழியை அனுமன் காட்டுவார். ஜெய் அனுமன்! SHARE IT.