News August 4, 2024
உக்ரைனால் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்கடிப்பு?

ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பலை தாக்கி மூழ்கடித்து விட்டதாக, உக்ரைன் அறிவித்துள்ளது. செவஸ்டபோலில் தாக்குதல் நடத்தி, அக்கப்பலை மூழ்கடித்ததாகவும், இத்தாக்குதலில் S-400 வான்பாதுகாப்பு சாதனங்கள் 4 சேதப்படுத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானத்தளம், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து ரஷ்யா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
Similar News
News October 23, 2025
திமுக எம்எல்ஏ காலமானார்.. நேரில் அஞ்சலி

சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமி(74)<<>> மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். கொல்லிமலை வீட்டில் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஏற்கெனவே 2 முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
News October 23, 2025
சிகரெட்டை விட இது ரொம்ப டேஞ்சர்.. கவனமா இருங்க!

நம்மூரில் ஊதுபத்தி ஏற்றாத வீடுகளே இருக்காது எனலாம். நறுமணத்தால் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் இந்த ஊதுபத்தியின் புகை, சிகரெட்டை விட ரொம்ப டேஞ்சர் என தெரியவந்துள்ளது. தென் சீன தொழில்நுட்ப யூனிவர்சிட்டியின் ஆய்வில், ஊதுபத்தியில் மிக நுண்ணிய அல்ட்ராஃபைன் 99% இருப்பதாகவும், அதில் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் பொருள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மக்களே, கொஞ்சம் உஷாரா இருங்க!
News October 23, 2025
BREAKING: இந்தியா பேட்டிங்

அடிலெய்டில் நடக்கும் 2-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸி. அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதல் ODI-ல் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், நிதிஷ் ரெட்டி, ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?