News March 22, 2025

டிரம்புக்காக பிரார்த்தனை செய்த ரஷ்ய அதிபர்

image

அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் காதில் குண்டு பட்டு காயமடைந்தார். அப்போது டிரம்ப் நலம் பெற வேண்டி தேவாலயம் சென்று ரஷ்ய அதிபர் புதின் பிரார்த்தனை செய்துள்ளார். இந்த தகவலை டிரம்பின் உயர்மட்ட தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். புதின் செய்ததை அறிந்தவுடன் டிரம்ப் நெகிழ்ந்து போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 23, 2025

‘PM கிசான்’ ₹6,000 பெறும் விவசாயிகளின் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் ‘PM Kisan’ திட்டப் பயனாளிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனுடன் அரசு கள அலுவலர்கள் (அ) இ-சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் 9,59,25,578 பேரும், தமிழகத்தில் 21,94,651 பேரும் பயன்பெறுகின்றனர்.

News March 23, 2025

திருப்பதியில் மீண்டும் பிளாஸ்டிக்கா?

image

திருமலை திருப்பதியில் சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் புழக்கத்திற்கு வந்தன. அண்மையில் வரிசையில் காத்திருந்த இரு மாநில பக்தர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், கண்ணாடி பாட்டில்களை வைத்து தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. இதனால் அலர்ட் ஆன TTD, மக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகளை பயன்படுத்தலாமா என ஆலோசித்து வருகிறது.

News March 23, 2025

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் AI பாடம்

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் AI பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த பாடத்திட்ட மாற்றம், தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு 15 நாட்களில் முடிவடையும் எனவும், 6,029 மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!