News February 25, 2025
ரஷ்ய அதிபர் சர்வாதிகாரி அல்ல: டிரம்ப்

உக்ரைனில் அதிபர் தேர்தலை நடத்தாத ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி எனக் கூறிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் சர்வாதிகாரி அல்ல எனத் தெரிவித்துள்ளார். உக்ரைன் உடனான போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட பிறகு ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் உடன்படிக்கை எட்டப்படும் எனவும், இது நீடித்தால், அது 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
Similar News
News March 8, 2026
டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்

ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதியளித்த டிரம்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இறையாண்மை கொண்ட நாட்டைச் சேர்ந்த நாங்கள், வெளிநாடுகளின் உத்தரவுகளை ஏற்கமாட்டோம். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று X தளத்தில் டிரம்ப்பை டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மட்டுமே நீடித்த உலக அமைதிக்கு அடித்தளமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 8, 2026
நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 8, 2026
பைனலில் வென்றால் எவ்வளவு பரிசு?

T20 WC தொடருக்காக ICC மொத்தம் ₹120 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹27.48 கோடியும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹14.65 கோடியும் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த SA, ENG அணிகளுக்கு தலா ₹7.24 கோடியும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ₹3.48 கோடியும், போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கு தலா ₹2.29 கோடியும் கிடைக்கும்.


