News August 20, 2024
ரஷ்ய கடற்படை தளபதி இந்தியா வந்தார்

ரஷ்ய கடற்படை தளபதி அலெக்சாண்டர் நேற்று இந்தியா வந்தடைந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு குறித்து இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதியுடன் அவர் நேற்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி வருகிற 23ஆம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ரஷ்ய தளபதி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Similar News
News March 23, 2026
வீட்டு சிலிண்டர்.. PM மோடி முக்கிய அறிவிப்பு

மேற்காசிய போர் சூழலால் இந்தியாவில் கச்சா எண்ணெய், LPG விநியோகம் பாதிப்பை சந்தித்து இருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், எரிபொருள் தட்டுப்பாடு பாதிப்புகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், வீட்டு உபயோக LPG இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவு சவால்களை சந்தித்தாலும், அதை இந்தியா திறம்பட கையாள்வதாகவும் குறிப்பிட்டார்.
News March 23, 2026
வெளிநாடு சென்று படிக்க ₹36 லட்சம் தரும் அரசு திட்டம்

வெளிநாடுகளில் PG/Ph.D படிக்க விரும்பும் பட்டியலின மாணவர்களுக்கு TN அரசு ₹36 லட்சம் வரை உதவித்தொகை தருகிறது. இதில், கல்வி கட்டணம், விசா, தங்குமிட கட்டணம் என அனைத்தும் கவர் ஆகும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கு அப்ளை செய்ய விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹12 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். 40 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <
News March 23, 2026
கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதி இல்லையா?

பிரேமலதா குடும்பத்தினர் ₹3 கோடி மதிப்பிலான Land Rover defender கார் முன்னால் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இந்த கார் திமுக கூட்டணியில் இணைந்தபிறகு பிரேமலதா வாங்கியதாக சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், அந்த காரை ஒன்றரை வருடத்திற்கு முன்பே வாங்கியதாக தெரிவித்த பிரேமலதா, கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க கூட தகுதியில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


