News September 15, 2025

அழுத்தத்திற்கு பணியாத இந்தியா: ரஷ்யா பாராட்டு

image

அமெரிக்கா, Nato நாடுகளின் அழுத்தத்திற்கு பணியாமல், தங்களுடன் நட்புறவுடன் இருப்பதாக இந்தியாவை ரஷ்யா பாராட்டியுள்ளார். இரு இடையிலான நட்பு, நிலைத்தன்மையுடன் மேம்பட்டு வருவதாகவும், இதில் விரிசல் ஏற்படுத்த முயன்றால் தோல்வியே மிஞ்சும் என்றும் கூறியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா மீது டிரம்ப் 50% வரிவிதித்ததோடு, ஐரோப்பிய நாடுகளையும் வரிவிதிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 15, 2025

சிகரெட் பழக்கத்தை விட நினைக்கிறீங்களா?

image

புகைப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்பது தெரிந்தும் பலரும் அதை தொடர்ந்து வருகின்றனர். அப்பழக்கத்தை விட நினைப்பவர்களோ, அதை கைவிட முடியாமல் தவிக்கின்றனர். சில நாள்கள் கட்டுப்படுத்தி விட்டுவிட்டு மறுபடியும் தொடர்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கென சில எளிமையான இயற்கையான டிப்ஸ்களை பட்டியலிடுகிறார், பிஹாரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான முகேஷ் ஷர்மா. மேலே Swipe செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

News September 15, 2025

அடுத்த 5 நாள்கள் மழை நீடிக்கும்

image

தமிழகத்தில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News September 15, 2025

விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் 3 தலைவர்கள்?

image

தொலைபேசி மூலம் சமாதானம் செய்த நயினாரிடம் <<17709574>>OPS<<>> பிடிகொடுக்காமல் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், TVK உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார். ஏற்கெனவே விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என டிடிவியும் கூறியிருந்தார். இதனால், OPS, TTV, செங்கோட்டையன் இணைந்து, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!