News March 25, 2024
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமை நிர்வாகி செர்ஹெய் போப்கோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மேற்கு உக்ரைனை தாக்கும் நோக்கில் கடந்த நான்கு நாள்களில், மூன்றுமுறை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. போலந்து வான்வழியில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகளால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை” என்றார்.
Similar News
News April 29, 2025
#ByeByeStalin CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!

<<16252222>>ஊர்ந்து<<>> என CM ஸ்டாலின் கூறியது அவையில் பேசுபொருளான நிலையில், மக்கள் #ByeByeStalin சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி, போதைப்பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி என அவர் விமர்சித்தார். பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலை.யே சாட்சி என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
News April 29, 2025
ஏப்ரலில் சவரனுக்கு ₹3,760 உயர்ந்த தங்கம்!

தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து இன்று (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் PM மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றம், எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 நாள்களாக எல்லையில் பரபரப்பு நிலவும் நிலையில், நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.