News October 24, 2025
ரஷ்யா யாருக்கும் அஞ்சாது: புதின்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, US அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் இந்த தடைகளுக்கெல்லாம் ரஷ்யா ஒருபோதும் அஞ்சாது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தை பாதிக்காது என்று கூறியுள்ள அவர், எந்தவொரு அழுத்தத்திற்கும் ரஷ்ய அடிபணிய போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 24, 2025
விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 சின்னங்களை தவெக தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் இந்த சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். முன்னதாக பரிந்துரையில் இருந்த ஆட்டோ, விசில் சின்னங்கள் தற்போது பட்டியலில் இல்லை என்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இதற்காக விண்ணப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த 5 சின்னங்கள் என்னவா இருக்கும்?
News October 24, 2025
மீண்டும் ரஞ்சி தொடரில் ஜடேஜா!

உலகின் பெஸ்ட் ஆல்ரவுண்டரான ஜடேஜா, ரஞ்சி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். நாளை தொடங்கவுள்ள ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார். அடுத்து தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகும் விதமாக ஜடேஜா இந்த போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
News October 24, 2025
நாடு முழுவதும் நாளை முடங்குகிறது

SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? நாடு முழுவதும் நாளை(அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE.


