News July 5, 2024

வடகொரிய துருப்புகளை களமிறக்கும் ரஷ்யா?

image

உக்ரைனுக்கு எதிரான போர்க் களமுனையில், வடகொரிய துருப்பு & போர் நுட்பங்களை பயன்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக டான்பாஸ் எல்லையில் வடகொரிய 15,000 வீரர்கள் (5 படைப்பிரிவுகள்) நிலைநிறுத்தப்படலாம் என உக்ரைன் ஆய்வாளர் அலெக்சி குஷ்ச் கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுதங்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள கொரியா நிலத்தடி போர் நுட்பங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 22, 2025

பாக்., ராணுவத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்

image

பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது. பலூச்சிஸ்தான் தனிநாடு போராட்டம் தீவிரமாக உள்ள நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. இன்று அங்கே ஒரு கிராமத்தில் பாக்., நடத்திய விமான தாக்குதலில் <<17793529>>30 பேர்<<>> கொல்லப்பட்டனர். இந்நிலையில், அங்கு ஆயுத போராட்டம் தொடங்கும் சூழல் உள்ளதாகவும், பெஷாவர் விமானப்படை தளம் முற்றுகையிடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News September 22, 2025

போராட்டங்களை சந்திக்கும் நாடுகள் PHOTOS

image

சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில், சமூக ஊடக செயலி தடைகள், ஊழல், சில பிரிவினரின் கோரிக்கைகள், குடியேற்ற எதிர்ப்பு உள்ளிட்டவை அடங்கும். மேலே, எந்தெந்த நாடுகளில் போராட்டம் என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 22, 2025

₹5,000 விலை குறைந்தது… HAPPY NEWS!

image

ஏசி மீதான GST 28%ல் இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளதால் முக்கியமான ஏசி பிராண்டுகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வோல்டாஸ் 1.5 டன் ஸ்பிளிட் பழைய விலை = ₹43,000 புது விலை = ₹39,600, எல்ஜி இன்வெர்ட்டர் 1.5 டன் = ₹52,000 புது விலை = ₹47,900, சாம்சங் ஸ்பிளிட் 1 டன் பழைய விலை = ₹35,000 புது விலை = ₹32,300, ப்ளூ ஸ்டார் இன்வெர்ட்டர் 1.5 டன் = ₹55,000 புது விலை = ₹50,700. வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.

error: Content is protected !!