News May 5, 2024
ஜெலன்ஸ்கிக்கு செக் வைக்கும் ரஷ்யா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா, அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் சேர்த்துள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ஊடக செய்திகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த செய்திக்கு பதிலடி கொடுத்துள்ள உக்ரைன், புதினுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்த சந்தேகத்தில் கைது செய்வதற்கான வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Similar News
News February 2, 2026
ஏமாற்றமளிக்கும் மத்திய பட்ஜெட்: திருமாவளவன்

FM தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு பதில் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என திருமா கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை என சாடியுள்ள அவர், தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை என்றும் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் TN-ஐ மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
பட்ஜெட் அறிவிப்பில் சற்று ஏமாற்றம்: டிடிவி

வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க மத்திய பட்ஜெட் உதவும் என TTV கூறியுள்ளார். அதிவேக ரயில் வழித்தடங்கள், பொதிகை மலையில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் உள்ளிட்டவற்றை வரவேற்பதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள், IIT கல்வி நிறுவனங்கள் போன்ற முக்கிய அறிவிப்புகள் இல்லாதது சற்று ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
Sports 360°: பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாம்பியன்

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20-ல் பாகிஸ்தான் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி *இலங்கை எதிரான 2-வது டி20-ல் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி *புரோ மல்யுத்த லீக்கில் ஹரியானா தண்டர்ஸ் மகுடம் சூடியுள்ளது *தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையரில், தேவிகா சிஹாக் சாம்பியன் பட்டம் வென்றார் *வாஷிங்டனில் நடக்கும் PSA ஸ்குவாஷில் அனாஹத் சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


