News August 17, 2024
பெண் மருத்துவர் கொலையில் பரவும் வதந்திகள்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல வதந்திகள் பரவுவதாக போலீஸார் கூறியுள்ளனர். அவை என்னென்ன என்று பார்க்கலாம். 1. பெண் மருத்துவரின் கழுத்து முதல் கால் வரை அனைத்து எலும்புகளும் முறிந்ததாக தகவல் பரவியது. ஆனால் இதனை முற்றிலும் பொய் என போலீஸ் மறுத்துள்ளது. 2. அவரது மர்ம உறுப்பில் 150 கிராம் விந்து இருந்ததாக தகவல் பரவி வருகிறது. இதையும் பொய் என போலீஸார் மறுத்துள்ளனர்.
Similar News
News August 15, 2025
மாவட்டந்தோறும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி

தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையில் CM அறிவித்த 9 அறிவிப்புகளில் 8-வது அறிவிப்பாக வந்த இது, மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 15, 2025
7 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 7-வது நாளாக குறைந்துள்ளது. கடந்த 8-ம் தேதி ₹75,760-க்கு விற்பனையான 22 கேரட் தங்கம், அதன் பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இன்று 1 கிராம் ₹9,280-க்கும், சவரன் ₹74,240-க்கும் விற்பனையாகிறது. முதல் வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், 2-வது வாரத்தில் சற்று சரிந்துள்ளது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
News August 15, 2025
சுதர்சன சக்ரா மிஷனில் இந்தியா: PM மோடி

கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்திலிருந்து உத்வேகம் பெற்று நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துதல் & நவீனமயமாக்கலை நோக்கி நாடு நகரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது சுதந்திர தின உரையில், 2035-க்குள் உள்நாட்டு கண்டுபிடிப்புகள், தற்சார்பு பொருளாதாரம், வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கி சுதர்சன சக்ரா மிஷனில் நாடு இயங்க இளைஞர்கள் உறுதிபூணுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.