News March 16, 2024
வதந்திகள் சவாலாக உள்ளன

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வதந்திகளை கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த கட்சிகள் தொடர்பாகவோ, வேட்பாளர்கள் தொடர்பாகவோ விமர்சனம் செய்யலாம், ஆனால் பொய் செய்திகளை பரப்பக் கூடாது என்று வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொய் செய்திகள் குறித்து அவ்வப்போது விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.
Similar News
News November 10, 2025
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: ED மனுவை ஏற்க SC மறுப்பு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான ED நடவடிக்கைக்கு தடை விதித்திருந்த ஐகோர்ட், அவரின் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், தடையை மீறி ED மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ED மனுத்தாக்கல் செய்த நிலையில், அதை ஏற்க SC மறுத்துள்ளது.
News November 10, 2025
இந்தியாவின் ‘பழம்பெரும்’ Brand-கள் பற்றி தெரியுமா?

பிஸ்கட், சோப்பு, கார் என பல தலைமுறையாக இந்தியாவில் இருக்கும் சில உள்நாட்டு Brand-கள் வெறும் பெயர்கள் அல்ல. அவை பாரம்பரியம், பெருமை. உள்ளூர் வேர்கள் உலகளாவில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். அப்படி நமது அன்றாட வாழ்க்கையை வடிவமைத்த, சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட சில Brand-கள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.
News November 10, 2025
பலதார மணத்துக்கு தடை: அசாம் அமைச்சரவை ஒப்புதல்

அசாமில் பலதார மணத்தை தடை செய்யும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் வரும் நவ.25-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். பழங்குடியினருக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


