News August 18, 2024
மாதம் ₹1000 பெற சிறப்பு முகாம் என்பது வதந்தி

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 குறித்த வதந்தியை, மக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடப்பதாக சோஷியல் மீடியாவில் வெளியான செய்தியை நம்பி, பெண்கள் பலர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர். இதுகுறித்து பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதால், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News August 13, 2025
இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டதால், சமீபத்தில் காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து குஜராத் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
News August 13, 2025
பாலியல் குற்றவாளி கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

பயிற்சிக்கு சென்ற மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ், மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கெபிராஜுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
OTT-யில் வெளியாகும் ₹2,000 கோடி வசூலித்த படம்!

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் வெளியான ‘சூப்பர்மேன்’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை 11-ம் தேதி வெளியான இந்த படம் உலகளவில் ₹2,000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படம், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி Amazon Prime, Fandango & Apple TV போன்ற OTT-களில் உலகளவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.