News August 18, 2024
மாதம் ₹1000 பெற சிறப்பு முகாம் என்பது வதந்தி

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 குறித்த வதந்தியை, மக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடப்பதாக சோஷியல் மீடியாவில் வெளியான செய்தியை நம்பி, பெண்கள் பலர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர். இதுகுறித்து பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதால், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News November 28, 2025
கள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கள அலுவலர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்

இரட்டை வரி விதிப்பு விவகாரம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில், பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு இன்று மாலையில் இருந்து பஸ் சேவை இயக்கப்படும் என ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
தவெக எலி, அதிமுக புலி: ஜெயக்குமார் பாய்ச்சல்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாகவே இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, தவெகவை எலி என்றும், அதிமுகவை புலி எனவும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்தவர் என்றும், அவர் எங்கிருந்தாலும் வாழ்க எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


