News September 12, 2025
தொண்டர்களுக்கு தவெக போட்ட ரூல்ஸ்

மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் நாளை தொடங்குகிறார். தொண்டர்கள் சில நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு தவெக அறிவுறுத்தியுள்ளது. *விஜய்யின் வாகனத்தை பின்தொடர கூடாது *அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கக் கூடாது* கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம் *மரங்கள் மீது ஏறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (பிரசார வாகன போட்டோஸ் மேலே கொடுக்கப்பட்டுள்ளது)
Similar News
News September 12, 2025
கில்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்?

இந்திய அணியை 3 ஃபார்மெட்களிலும் நீண்ட காலம் வழிநடத்தும் திறன் கில்லுக்கு இருப்பதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். அதனால் தான் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால், அதுவே அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் என்றும் ஜடேஜா கூறியுள்ளார். மேலும், கில் ஒரு Consistency-ஆன வீரர் எனவும், அதனால் தான் அவர் மீது பலரும் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
OFFICIAL: நேபாள் இடைக்கால அரசு தலைவராகும் சுசீலா

நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இன்று இரவு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீலாவின் பதவியேற்பிற்காக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. GEN Z போராட்ட குழு – ராணுவம் இடையே இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், சுசீலாவை இடைக்கால PM-ஆக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
News September 12, 2025
BREAKING: தீபாவளி பரிசாக ₹2,000?.. அரசு புதிய தகவல்

தீபாவளி பரிசாக PM KISAN திட்ட 21-வது தவணை தொகையை விரைவில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 4 மாத இடைவெளியில் தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தவணை ஆக.2-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இந்நிலையில், வடமாநில வெள்ள பாதிப்பு கருதி தீபாவளி பண்டிகைக்கு முன் (அக்டோபர்) அடுத்த தவணை வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.