News March 16, 2024
திருவண்ணாமலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
Similar News
News September 18, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.09.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் சமூக நீதி உறுதிமொழியை ஏற்றனர். அனைவரும் சமூக நீதியை நிலைநாட்டவும், சாதி, மத, இன பாகுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் உறுதி பூண்டனர்.
News September 17, 2025
தி.மலையில் தீபாவளி பட்டாசு சில்லறை உரிமம் விண்ணப்பம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்ததாவது: இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு சில்லறை விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோர், அக்டோபர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பட்டாசு விற்பனையாளர்கள் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து சரியான நேரத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.