News August 31, 2025

ரோஜா மலராக மலர்ந்த ருக்மினி வசந்த்

image

விஜய்சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் ஜோடி சேர்ந்ததன் மூலம், தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் ருக்மினி வசந்த். அடுத்து வெளி வரப்போகும் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும், அவர்தான் ஹீரோயின். தமிழில் அடுத்தடுத்து நிறைய படங்களை கையில் வைத்துள்ளார் ருக்மினி. அதேசமயம், சோஷியல் மீடியாவிலும் விதவிதமான போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Similar News

News September 1, 2025

ஆல் ஏரியாலயும் தோனி கில்லி.. PHOTO

image

6 மாதம் விவசாயி, 3 மாதம் கிரிக்கெட் வீரர் என்பதே தோனியின் இலக்கணமாக அவரது ரசிகர்கள் கூறுவது. அதற்கேற்றார்போல் தான் அவரது செயல்பாடும் இருக்கும். அந்த வகையில் தோனி கோல்ஃப் விளையாடும் போட்டோ வைரலாகிறது. ‘எப்பவுமே என் தலைவன் எனர்ஜிட்டிக்கா இருப்பாப்ல’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் அவரை Mentor ஆக நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

News September 1, 2025

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

image

‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சூர்யா, மீண்டும் போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி படத்திலும் சூர்யா கமிட்டாகியுள்ளார்.

News September 1, 2025

செப்டம்பர் 1: வரலாற்றில் இன்று

image

*1593 – ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் பிறந்தநாள்.
*1604 – சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதல்முறையாக வைக்கப்பட்டது.
*1939 – மாற்றுத்திறனாளிகள், மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மானியர்களை கருணைக் கொலை செய்வதற்கு ஹிட்லர் ஒப்புதல் அளித்தார்.
*1979 – நாசாவின் Pioneer 11 ஆளில்லா விண்கலம், சனி கோளை 21,000 கி.மீ., தூரத்தில் அடைந்தது. *1980 – நடிகை கரீனா கபூர் பிறந்தநாள்.

error: Content is protected !!