News May 1, 2024
ஆமை வேகத்தில் அரை சதம் அடித்த ருதுராஜ்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பொறுமையாக பேட்டிங் செய்துவரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகள் சரியத் தொடங்கியதால் பொறுமையாக ஆடிவந்த அவர், 44 பந்துகளில் 55* ரன்கள் அடித்துள்ளார். தற்போது, CSK 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. இன்று CSK எவ்வளவு ரன்கள் எடுக்கும்.?
Similar News
News January 28, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் எந்த தொகுதியில் களமிறங்குவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். முதற்கட்டமாக காமராஜர் போட்டியிட்ட விருதுநகர், நாகர்கோவில் ஆகிய 2 தொகுதிகள் லிஸ்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விருதுநகரை தேர்வு செய்ய விஜய் விருப்பம் காட்டுவதாக பேசப்படுகிறது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?
News January 28, 2026
திருமணத்திற்கு முன்பே பிறந்த தமிழ் நடிகை

கமல்ஹாசன் 1988-ல் சரிகாவை திருமணம் செய்தபோது, அவர்களுக்கு பிறந்த ஸ்ருதிஹாசனுக்கு வயது 2. உண்மைதான், ஆனால் அதற்கு முன்பே இருவரும் லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். அதனால் தான், கமலின் திருமண போட்டோக்களில் ஸ்ருதியும் இருப்பார் என்று கிசுகிசுக்கப்படும். திருமணத்திற்கு பிறகு பிறந்தவர் தான் மகள் அக்ஷரா. பின்னர், 2004-ல் கமல் – சரிகா உறவு விவாகரத்தில் முடிந்தது.
News January 28, 2026
அஜித் பவார் மறைவு இதயத்தை நொறுக்கியது: ராகுல்

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அஜித் பவார் மற்றும் அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் விபத்தில் உயிரிழந்த செய்தி தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான இந்த சூழலில் மகாராஷ்டிரா மக்களுக்கு தான் துணை நிற்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.


