News April 24, 2024
சதம் விளாசினார் ருதுராஜ்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 56 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 103 ரன்களை எட்டினார். சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி தற்போது வரை 18 ஓவர்களில் 178/3 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News January 12, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3000 ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.8-ம் தேதி முதல் இன்று வரை சுமார் 2,04,10,899 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகை ₹6,123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம் ❤️PHOTO❤️

Ex இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு அவரது காதலி சோஃபி ஷைனியுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தனது கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ள போட்டோவை ஷிகர் தவான் SM-ல் பகிர்ந்துள்ளார். இதற்கு ❤️❤️❤️ பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ஏற்கெனவே, ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2023-ல் ஷிகர் தவான் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிறு) தாக்கல் செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.


