News April 14, 2024

அரை சதம் கடந்தார் ருதுராஜ்

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவரும் இவர் 33 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். மேலும், 57 போட்டிகளில் விளையாடி 2,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் குறைவான போட்டிகளில் விளையாடி 2,000 ரன்களைக் கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது CSK 13 ஓவரில் 110/2 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News

News November 9, 2025

வாக்கு திருட்டை மூடி மறைக்கவே SIR: ராகுல் காந்தி

image

வாக்கு திருட்டை மூடி மறைக்கவும், அதை நிறுவனமயப்படுத்தவும் தான் SIR பணிகள் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி.,யில் பேட்டியளித்த அவர், ஹரியானா, பிஹார் போன்று மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கரிலும் இது நடந்துள்ளதாக நம்புவதாக கூறினார். வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் விரிவான தகவல்கள் உள்ளதாக தெரிவித்த ராகுல், அதை படிப்படியாக வெளியிடுவோம் என்று குறிப்பிட்டார்.

News November 9, 2025

நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

image

முறையாக பள்ளிக்கு வரும் +2 மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு எழுத <<18239237>>ஹால் டிக்கெட்<<>> வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்க ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிகளில் அதற்கான பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 9, 2025

ரஜினி, அஜித் சம்பளத்துக்கு வருகிறது கட்டுப்பாடு

image

இனி படங்களின் லாப நஷ்டங்களில் நடிகர்களுக்கு பங்கு உண்டு என தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு படம் நஷ்டமானால், அந்த பாரத்தை தயாரிப்பு நிறுவனம் மட்டுமே தாங்கவேண்டிய சூழல் இருக்காது. ஒருவேளை வசூலை குவித்தால் நடிகர்களும் லாபம் பார்க்கலாம். மேலும், நடிகர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்களின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!