News April 18, 2025
திமுக கூட்டணியில் சலசலப்பு

பொன்முடி மீது CM ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என கூட்டணி கட்சி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு பேராசியர் இப்படி மோசமாக பேசியிருக்க கூடாது. அவரின் கட்சி பதவியை மட்டும் பறித்தது பத்தாது என்பது பலரின் கருத்து. அது நியாயமான ஒன்றுதான். அதையே நானும் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் பேச்சால் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 6, 2025
கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரியில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி, ஓசூர், குருபரப்பள்ளி, ஜூஜூவாடி, பேகப்பள்ளி, ஊத்தங்கரை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மேலும் எந்தஎந்த பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என்பதை <
News December 6, 2025
தவெகவில் இணைந்தவுடன்.. விஜய் போட்ட உத்தரவு

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார், திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.
News December 6, 2025
இண்டிகோ மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர்

இண்டிகோ பிரச்னை விரைவில் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். விமான பணி நேர வரம்பு விதிகளால்தான் இந்த இன்னல்கள் நேர்ந்ததாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மற்ற விமான நிறுவனங்கள் சரியாகத்தானே இயங்குகிறது என கூறியுள்ளார். மேலும் இதற்கு இண்டிகோ தான் காரணம் என்ற அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.


