News March 6, 2025
ஆர்எஸ்எஸ் VS பாஜக மோதல்: தாய்மொழி கருத்தால் சர்ச்சை

பங்காளிகளாக இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவிற்குள் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் வசிப்பதற்கு மராத்தி மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறி இருந்தார். அவரது கருத்து மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் ஃபட்னாவிஸ் (பாஜக), மகாராஷ்டிரா, மும்பையின் மொழி மராத்தி தான் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 6, 2025
‘இந்தியர்களை எலான் மஸ்க் மிஞ்ச முடியாது’

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்கள் இந்திய சந்தைக்குள் நுழைவது குறித்து ஜிண்டால் குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியர்களான எங்களை மீறி எலான் மஸ்க்கால் இங்கு சாதிக்க முடியாது. இங்குள்ள டாடா, மஹிந்திரா நிறுவனங்களை டெஸ்லாவால் பின்னுக்கு தள்ள இயலாது. எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். பல பிரமிக்கத்தக்க செயல்களை செய்யலாம். ஆனால், இங்கு அவரால் முடியாது எனக் கூறியுள்ளார்.
News March 6, 2025
சூரிய பெயர்ச்சி: மார்ச் 15 முதல் 3 ராசிகளுக்கு பணமழை

சூரிய பகவான் மார்ச் 15 முதல் மீன ராசிக்கு செல்வதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பணமழையும் கொட்டப் போகிறது. 1) தனுசு: நிதி நிலைமை உயரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பரம்பரை சொத்தால் ஆதாயம் உண்டு. 2) மீனம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இன்பம் கூடும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். 3) மிதுனம்: வியாபாரம், தொழிலில் பெரிய முன்னேற்றம் உண்டு. வெற்றி தேடி வரும். முதலீடு லாபம் தரும்.
News March 6, 2025
சாதி பெயர் நீக்கம்.. அரசுக்கு கெடு விதித்த ஐகோர்ட்

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சாதிப் பெயரை நீக்குவது குறித்து மார்ச் 14க்குள் விளக்கமளிக்க இறுதி கெடு விதித்த நீதிமன்றம், அரசு விளக்கம் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளது.