News April 5, 2025
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் RSS : ராகுல் குற்றச்சாட்டு

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃப் மசோதா, எதிர்காலத்தில் பிற பிரிவினரை குறிவைக்க முன்மாதிரியாக உள்ளது என்று மக்களவையில் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். RSS-ன் கவனம், கிறிஸ்தவர்கள் மீது திரும்ப நீண்ட நேரம் ஆகாது; பாஜக அரசின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
கூட்டணி: முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் டிடிவி

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை டிடிவி சந்தித்த நிலையில், NDA கூட்டணியில் இணைந்தால் அமமுகவிற்கு 7 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் உள்ளடி வேலை பார்த்து தங்களது வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படலாம் என TTV நினைக்கிறாராம். இந்த குழப்பத்தால், கடந்த 3 நாள்களாக எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
ஹாஸ்பிடல்களில் அடையாள அட்டை கட்டாயம்

தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் இன்று முதல் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலில் மகப்பேறு வார்டு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதன் எதிரொலியாக அரசு ஹாஸ்பிடலில் இனி ஐடி கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
சென்னையில் PM மோடி பங்கேற்கும் மாநாடு

ஜன.23-ல் தமிழகம் வரும் PM மோடி, மதுரையில் நடைபெறவுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மோடி பங்கேற்கும் மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்ளை தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை பாஜகவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.


