News October 10, 2025
சமூகத்தில் வெறுப்பை RSS கூர்மைபடுத்துகிறது: ராகுல்

சாதிய பாகுபாட்டால் ஹரியானாவில் IPS அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்துகொண்டார். ஒரு அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண தலித் மக்கள் எதிர்கொள்ளும் வலியை கொஞ்சம் யோசித்து பாருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வெறுப்பையும், மனுவாத சிந்தனைகளையும் பாஜக, RSS கூர்மைபடுத்தி வருவதாகவும், இந்திய சமூகங்கள் பிரிவினையின் உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 10, 2025
மணிக்கு 310 கிமீ வேகம்.. முதல் EV காரை அறிவித்த Ferrari

Ferrari நிறுவனம், EV கார் தயாரிப்பை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ‘Elettrica’ எனும் பெயரில் கார்கள், அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ளன. 4 சீட்டுகள் கொண்ட இந்த கார், ஒரு முறை சார்ஜ் போட்டால் 530 கிமீ பயணம், 310 Kmph வேகம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ளது. இக்கார்களின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ₹5.14 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
News October 10, 2025
பிக்பாஸில் எலிமினேட் ஆகப்போவது இவரா?

பிக் பாஸ் சீசன் 9 முதல் வார நாமினேஷனில் திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், பிரவீன் காந்தி உள்ளனர். இதில் Watermelon Star திவாகர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில போட்டியாளர்கள் அவரை கார்னர் செய்வதால் மக்கள் மத்தியில் அவருக்கு சிம்பதி கூடியுள்ளது. இதனால், கம்மியான வாக்குகளை பெற்றிருப்பதால் பிரவீன் காந்தி (அ) கலையரசன் எலிமினேட் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.
News October 10, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.