News October 28, 2025

RSS சர்ச்சை: கர்நாடக அரசுக்கு பின்னடைவு

image

பொது இடங்களில் 10 பேருக்கு அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் அமைப்புகள் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கர்நாடகா அரசின் உத்தரவை, அம்மாநில ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் உத்தரவு குடிமக்களின் அடைப்படை உரிமைகளை மறுப்பதாக புனஸ்சைதன்ய சேவா சமிதி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. முன்னதாக, RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவே, இத்தகைய உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

Similar News

News October 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 29, ஐப்பசி 12 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News October 29, 2025

INDIA கூட்டணியின் பேராசை: நிதிஷ்குமார்

image

பிஹாரை 15 ஆண்டுகள் கொள்ளையடித்தவர்கள் தற்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக INDIA கூட்டணியின் <<18131543>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதால் தான், இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2,500, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை INDIA கூட்டணி அளித்திருந்தது.

News October 29, 2025

பாடும் பறவைகள்

image

தாளமிடும் இசையின் ஓசையாக ஒளிக்கும் பறவைகளின் கூக்குரல், நமது காதுகளில் கரைந்தோடும் தேனிசை. இயற்கையின் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஆம் பறவைகள் உண்மையிலேயே பாடுகின்றன. பாடும் பறவைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இதேபோன்று நீங்கள் ரசித்த பாடும் பறவையின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!