News March 9, 2025
மாதம் ரூ.9,000 பென்ஷன்.. மத்திய அரசிடம் கோரிக்கை

மாதம் ரூ.9,000 EPFO பென்ஷன் அளிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மெட்ராஸ் தொழிற்சங்கம், பி&சி மில்ஸ் தொழிற்சங்கம் ஆகியவை மாண்டவியாவிடம் கோரிக்கை மனு அளித்தன. அதில், தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் பென்ஷனை ரூ.1,000இல் இருந்து ரூ.9,000ஆக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
Similar News
News July 11, 2025
ஆட்சியைப் பிடிக்க முடியலை… அன்புமணி வருத்தம்

தமிழகத்தில் பாமகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்று அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பாமகவினருக்கு எழுதிய கடிதத்தில், பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகளாகியும் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாக, வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், தமிழக மக்களுக்காக, சமூகநீதிக்காக பாமக ஆற்றிய பணிகள் மனதிற்கு நிறைவைத் தருவதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.
News July 11, 2025
மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்

மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரனின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News July 11, 2025
NDA கூட்டணியில் உள்ளோம்: ஜான் பாண்டியன்

அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இருக்கிறோம் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், கூட்டணியில் தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணிக்கு தங்களை அழைக்கவில்லை என்றும் அழைத்தால் அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்போம் எனவும் ஜான் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.