News April 6, 2024
மகளிருக்கு மாதம் ரூ.900 சேமிப்பு

இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் ₹900 சேமிப்பதாக உதயநிதி கூறியுள்ளார். சென்னையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘ ஏற்கெனவே திமுக ஆட்சியில் மகளிருக்கு ₹1,000 வழங்கப்படுகிறது. மேலும், தேர்தல் முடிந்த பிறகு விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ₹1000 வழங்கப்படும். இதன் மூலம், திமுக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,900 வரை பணப் பலன்களை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது அலர்ட்

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் நாளை பரவலாக கனமழை பெய்யும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், நாளை மறுதினமும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News November 4, 2025
பெண்களுக்கு தாலி கட்டாயம் இல்லை: சின்மயி கணவர்!

தாலி அணிவது பெண்களின் விருப்பம், அது கட்டாயம் இல்லை என சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சின்மயியிடமும் திருமணத்திற்கு பிறகு தாலி அணிவது உன்னுடைய விருப்பம் என கூறியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி ராகுலின் இயக்கத்தில், ரஷ்மிகா நடித்துள்ள ‘The Girlfriend’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் கருத்து பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
News November 4, 2025
இன்று முதல் 12 மாதங்கள் FREE

இன்று முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO-வை இலவசமாக பெறலாம் என OpenAI அறிவித்திருந்தது ✤அதை பெற, ChatGPT-யின் Homepage-க்கு செல்லவும் ✤மேலே உள்ள ‘Upgrade for free’ஐ கிளிக் செய்யவும் ✤Go (Special Offer)-ஐ கிளிக் செய்யவும் ✤இதற்கு ₹2 கட்டணமாக வசூலிக்கப்படும் ✤கட்டியவுடன் உங்களுக்கு 12 மாதங்களுக்கு Free ChatGPT GO கிடைக்கும். இதை செய்த பிறகு, மறக்காமல் Auto Pay ஆப்ஷனை Off செய்து விடுங்கள்.


