News February 28, 2025
ரூ.90 லட்சம் கோடி மாயம்

இந்திய பங்குச்சந்தைகளுக்கு இது போதாத காலம் போல. தொடர் சரிவை கண்டுவந்த நிலையில் இன்று NIFTY 400+ புள்ளிகளையும், BSE 1400 புள்ளிகளையும் இழந்தன. தேசிய பங்குச்சந்தையின் NIFTY, கடந்த செப்-ல் 26,277.35 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்தது. அதிலிருந்து இன்றுவரை 15% சரிந்துள்ளது. SEP-லிருந்து இன்றுவரை நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
விஜய்யுடன் கூட்டணியா? சசிகலா பதில்

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, கட்சியின் <<19370263>>சின்னத்தையும் <<>>அறிமுகம் செய்தார். இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார். மேலும், மக்களுக்கான கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

மத்திய கிழக்கு நாடுகளிடையே நிலவும் போர் பதற்றத்திற்கு நடுவிலும், <<19369060>>தங்கம் விலை<<>> தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், 1 சவரன் ₹70,000 வரை குறைய வாய்ப்பிருப்பதாக ப்ளூம்பெர்க் (BLOOMBERG) நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேநேரம், இந்த மாற்றம் படிப்படியாகவே நிகழும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
News March 13, 2026
புதுச்சேரியில் ரங்கசாமிக்கு 16.. பாஜகவுக்கு 14..!

புதுச்சேரியில் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் NR காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, லஜக கட்சிகளுக்கு தங்கள் வசமுள்ள தொகுதிகளில் இருந்து பாஜக சீட் ஒதுக்கும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.


