News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 23, 2026
தங்கம் விலை தலைகீழாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $118.55 உயர்ந்து $4,953.03-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $4.04 உயர்ந்து $96.84 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.23) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 23, 2026
கோயிலில் இருந்து வரும்போது இவற்றை பிறருக்கு தராதீங்க

கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, இந்த பொருள்களை பிறருக்கு கொடுத்தால், வீட்டிற்கு வரும் தெய்வம் வெளியேறிவிடும் என்பது ஐதிகம். பிரசாதமாக கொடுக்கும் பொருள்கள், அதாவது எலுமிச்சை பழம், பூ, மாலை போன்றவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது. மேலும், கோயிலுக்கு சென்று திரும்பும் போது, யாருக்கும் எந்த தானமும் வழங்கக்கூடாதாம். அதே நேரத்தில், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை பிறருக்கு வழங்கலாம்.
News January 23, 2026
2வது T20: வெற்றியை தொடருமா இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2-வது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை அருமையாக தொடங்கியது. நியூசிலாந்து அணியும் வலுவான நிலையில் இருப்பதால், இந்த போட்டி இந்தியாவுக்கு கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ODI தொடர் போல் இல்லாமல், இதை நிச்சயம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


