News November 20, 2024
Rs.6600 கோடி பிட்காயின் மோசடி தெரியுமா (1)
2018இல் நடந்த பிட்காயின் மோசடியில் ரூ.6600 கோடி புரண்டது. அமித் பரத்வாஜ் என்பவர் தான் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். துபாய்க்கு தப்பியோடிய அமித் 2022-ல் மரணமடைய, அவரது குடும்பத்தினர் அனைவரின் மேல் ED வழக்குப்பதிவு செய்தது. 2017-ம் ஆண்டில் அமித் நடத்திய வேரியபில் டெக் நிறுவனம் மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் பிட்காயின் மூலம் ரூ.6600 கோடியை வசூல் செய்தது. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா…
Similar News
News November 21, 2024
உக்ரைன் மீது அணுகுண்டு வீசப்பட்டால் என்ன நடக்கும்?
போரில் உக்ரைனை பணிய வைப்பதற்கு ரஷ்யா <<14665025>>அணுகுண்டு<<>> வீசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் முன்கூட்டியே கணித்துள்ளனர். அதை காணலாம். *லட்சக்கணக்கில் உயிரிழப்பு* மரம், செடி கொடிகள் கருகி பல ஆண்டுகள் வரை முளைக்காது *கதிர்வீச்சால் எதிர்காலத்தில் பிறக்கும் சந்ததியினரும் பாதிக்கப்படுவர் *காற்று கிழக்கு பக்கமாக வீசினால் கதிர்வீச்சு ரஷ்யா பக்கம் பரவி அங்கும் அழிவு ஏற்படும்.
News November 20, 2024
எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல்சாமியா? மா.சு
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்காதீர்கள் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியா, எரிச்சல்சாமியா என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்பி வருவதாக சாடியுள்ளார்.
News November 20, 2024
தனுஷை புறக்கணித்த நயன்தாரா
தனது ஆவணப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், அதில் படக் காட்சிகளை சேர்க்க ஒப்புதல் அளித்த பட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ், தெலுங்கு, மலையாள தயாரிப்பாளர்கள் பெயர்களை வரிசையாக பட்டியலிட்டுள்ளார். “நானும் ரவுடிதான்” பட காட்சியை சேர்க்க ஒப்புதல் தராத அப்படத் தயாரிப்பாளரான தனுஷ் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அதிர்ச்சி அளித்துள்ளார்.