News April 2, 2024

ரூ. 620 கோடி செலுத்தக்கோரி IT நோட்டீஸ்

image

IOB வங்கிக்கு ரூ. 620 கோடி செலுத்தக்கோரி IT நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி நிலுவை வைத்திருப்பதாக கூறி, காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் IT ரூ. 3,500 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டு வரி நிலுவைக்காக IOB வங்கிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து முறையீடு செய்ய IOB திட்டமிட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

பாமக- தவெக கூட்டணி பேச்சு.. யார் CM?

image

விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் CM பதவியை ராமதாஸ் கேட்க, துணை முதல்வர் பதவிக்கு விஜய் தரப்பு ஓகே சொல்லி இருக்கிறதாம். ஆனால், CM பதவியில் ராமதாஸ் உறுதியாக நிற்க, விஜய்யிடம் தெளிவான பதில் பெற்று வாருங்கள், கூட்டணி பேசி முடிக்கலாம் என அவர் கூறியுள்ளாராம்.

News April 19, 2025

தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 அறிவிப்புகள்

image

தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை CM வெளியிட்டார். புவிசார் குறியீடு மானியம் ₹1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூரில் உலோகவியல் ஆய்வகங்கள் ₹5 கோடியில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் ₹5 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள். காக்கலூர் தொழிற்பேட்டையில் ₹3.90 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க ₹2 லட்சம் என அறிவிப்புகளை வெளியிட்டார்.

News April 19, 2025

சுபம் – தேதி குறிச்ச சமந்தா!

image

பெரிய இடைவேளைக்கு பிறகு, சமந்தா மீண்டும் திரைத்துறையில் பிஸியாகி இருக்கிறார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘சுபம்’ என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா என்பவர் இயக்கி இருக்கிறார்.

error: Content is protected !!