News April 28, 2024
ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவருக்கு ரூ.5,000 இழப்பீடு

பெங்களூருவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஸ்விக்கி மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அதற்காக ₹187 தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியும், ஐஸ்கீரிம் வந்து சேரவில்லை. இது குறித்துப் புகார் தெரிவித்தும் அலட்சியமாக பதில் வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வழக்குச் செலவோடு ரூ.5,000-ஐ இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
டிரெண்டிங்கில் யூரி ககாரின்…. யார் இவர் ?

அனுமன் பற்றிய <<17507921>>அனுராக் தாக்கூரின்<<>> பேச்சால் X தளத்தில் யூரி ககாரின் பெயர் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. விண்வெளிக்கு முதலில் சென்றவர் சோவியத் யூனியனின் யூரி ககாரின் தான். அவர் ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். தொடர்ந்து வோஸ்டாக் 1 விண்கலம் மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றியது. இந்த விண்வெளி பயணம் 108 நிமிடங்கள் நீடித்தது.
News August 26, 2025
மோடி சிறைக்கு சென்றால்.. அமித்ஷா சொல்வது இதுதான்!

பதவி பறிப்பு மசோதா குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, PM மோடி சிறைக்கு சென்றால் அவரும் கூட பதவியை இழப்பார் எனத் தெரிவித்துள்ளார். மோடி அவருக்கு எதிராகவே ஒரு அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், முதல்வரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்தவாறு நாட்டை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 26, 2025
ராசி பலன்கள் (26.08.2025)

➤ மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – ஆதரவு ➤ மிதுனம் – தோல்வி ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – பெருமை ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – நற்சொல் ➤ தனுசு – மகிழ்ச்சி ➤ மகரம் – கீர்த்தி ➤ கும்பம் – சோதனை ➤ மீனம் – வாழ்வு.