News March 30, 2025
வங்கிகளில் உரிமம் கோரப்படாத ரூ.46,222 கோடி

வங்கிகளில் உரிமம் கோரப்படாமல் இருக்கும் பணம் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் ரூ.18,380 கோடியும், 2020இல் ரூ.24,356 கோடியும், 2021இல் ரூ.31,078 காேடியும், 2022இல் ரூ.39,900 கோடியும் உரிமம் கோரப்படாமல் இருந்துள்ளது. இந்தத் தொகை கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.46,222 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் 18 கோடி கணக்குகளில் இந்தத் தொகை உரிமம் கோரப்படாமல் உள்ளது.
Similar News
News January 18, 2026
இட்லி கல்லு மாறி இருக்கா? அப்போ இப்படி பண்ணுங்க!

நாம் விரும்பி உண்ணும் இட்லி, சில சமயங்களில் மண்டையை உடைக்கும் கல்லாக மாறிவிடுவது உண்டு. இந்நிலையில் மல்லிகை பூ போன்ற இட்லியை பெற, நீங்கள் எடுத்து வைத்துள்ள புளித்த இட்லி மாவில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்துவிடவும். அதன்பின் பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மாவை ஊறவிடுங்கள். அதன்பின்னர் மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுங்கள். மல்லிகைப் பூ போன்ற இட்லி ரெடி!
News January 18, 2026
திமுகவை பின்பற்றும் EPS? மனோ தங்கராஜ்

மகளிர் உரிமைத் தொகையை ஏமாற்று வித்தை எனக் கூறிய EPS, தற்போது ₹2,000 தருவதாக பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். இதன் மூலம் மாநில நிதி நிலைமை சரியான நிலையில் இருப்பதை EPS உணர்ந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2021 தேர்தலில் அத்திட்டத்தை அரசியலுக்கான அறிவிப்பு என விமர்சித்த EPS, தற்போது திமுகவை பின்பற்றி ₹2,000 தரப்படும் என்று அறிவித்தாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 18, 2026
தேர்தலுக்கு ரெடியாகும் காங்கிரஸ்!

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி ஆகியோருடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் TN-ல் நடைபெறும் கட்சியின் முதல் கூட்டம் என்பதால் அரசியல் கவனம் பெற்றுள்ளது.


