News February 23, 2025
மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம்.. பெரிய சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல், மனைவி தனஸ்ரீக்கு விவாகரத்தின்போது ரூ.60 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாக தகவல் வெளியாகியது. தனஸ்ரீ குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர். ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசன் தனது மனைவி சுசன்னேவிற்கு விவாகரத்தின்போது 2014இல் ரூ.380 கோடி ஜீவனாம்சம் கொடுத்தார். இந்திய பிரபலம் ஒருவர் ஜீவனாம்சமாக அதிக தாெகை கொடுத்தது இதுவே எனக் கூறப்படுகிறது.
Similar News
News February 23, 2025
பல்ப் வாங்கிய IIT பாபா

இன்றைய இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான்தான் வெற்றி பெறும் என்று IIT பாபா கணித்திருந்தார். அந்த கணிப்பை பொய்யாக்கி, இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து சோசியல் மீடியாவில் பாபாவை ரசிகர்கள் பஞ்சராக்கி வருகின்றனர். ஐஐடியில் படித்து முடித்துவிட்டு சன்னியாசியான பாபா, கும்பமேளாவில் புகழடைந்தார். ஆனாலும், வருங்கால கணிப்புகள் அவருக்கு கை வராத கலை போல.
News February 23, 2025
மதத்தை கேலி செய்வதா? மோடி கொதிப்பு

கும்பமேளா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்து வருவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பல நேரங்களில் அந்நிய சக்திகள் அவர்களுக்கு உதவி செய்து இந்தியாவையும் அதன் மதத்தையும் பலவீனப்படுத்துவதாக சாடினார். இந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள், பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
News February 23, 2025
அடிதடி வழக்கு: பாஜக எம்எல்ஏக்கு 3 மாதம் சிறை

பீகார் பாஜக எம்எல்ஏக்கு அடிதடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அலிநகர் தொகுதி எம்எல்ஏவான மிஸ்ரி லால் மற்றும் அவரின் உதவியாளர், உமேஷ் என்பவரை தகராறின்போது தாக்கி மண்டையை உடைத்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மிஸ்ரி லால், உதவியாளருக்கு 3 மாதம் சிறை, தலா ரூ.500 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும், பிணைத் தொகையில் ஜாமீன் அளித்தது.