News February 26, 2025

மாதம் ரூ.3000: யாருக்கு தெரியுமா?

image

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், அரசுத்துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்த அவர், 2047-க்குள் மாநிலத்தின் தலா வருமானத்தை $42,000-மாக (சுமார் ரூ.36.5 லட்சம்) உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். உதவித்தொகை ஐடியாவை தமிழக அரசும் பின்பற்றலாமே?

Similar News

News March 3, 2026

10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

image

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <>dge.tnschools.gov.in/hallticket<<>> என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். தனி தேர்வர்கள் PRIVATE CANDIDATE பட்டனை கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 3, 2026

L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

image

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 3, 2026

திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

image

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!