News December 4, 2024

கிழிந்த பையில் ரூ.3 லட்சம்.. லட்சாதிபதி பிச்சைக்கார பாட்டி!

image

லலிதா என்கிற மூதாட்டி பீகார் ஜனக்பூர் ராமர் கோயில் வாசலில் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அருகிலிருப்பவரிடம் தன் பையை கொடுத்துள்ளார். அவர் குப்பை தொட்டியில் போட போனபோது அங்கிருந்தவர்கள் கவனிக்கவே பையில் பணம் இருப்பது தெரிந்துள்ளது. கிழிந்த பையில் மொத்தமாக ரூ.3 லட்சம் இருந்தது. இந்த பணம் மூதாட்டியின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என சக துறவிகள் கூறினர்.

Similar News

News November 28, 2025

திருப்பூர் அருகே பயங்கர விபத்து!

image

திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேங்கிபாளையம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி ஒன்று சாலையோரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று. அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News November 28, 2025

காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்..

image

காலை உணவில் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இது அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறையும், வயிற்று பிரச்னைகள் வராது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நல்ல மனநிலையில் இருப்பீர்கள், மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் உங்கள் முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. SHARE.

News November 28, 2025

நேபாள புதிய ரூபாய் நோட்டில் இந்திய பகுதிகள்

image

நேபாளத்தில் நேற்று புதிய ₹100 நோட்டு வெளியிடப்பட்டது. அதில், உத்தராகண்டின் லிபுலேக், லிம்பியாதுரா & காலாபானி பகுதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, 2020-ல், முன்னாள் PM சர்மா ஒலி தலைமையிலான அரசு, இந்த 3 பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும், அந்த வரைபடம் அந்நாட்டு பார்லிமென்டில் அங்கீகரிக்கப்பட்டது.

error: Content is protected !!