News February 24, 2025
ரூ.2000 வந்தாச்சு… உடனே செக் பண்ணுங்க

விவசாயிகளுக்கான PM Kisan உதவித் தொகையின் 19-வது தவணையை, இன்று பிஹாரில் பாகல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற தகுதியான விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க.
Similar News
News February 24, 2025
அதிமுக பூத் கமிட்டிகளை விரைவுப்படுத்துங்க: இபிஎஸ்

அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் இன்று மாலை மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், அதிமுக விளையாட்டு அணியில் இளம் தலைமுறை வீரர்களை சேர்க்க அறிவுறுத்திய அவர், கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்துள்ளார்.
News February 24, 2025
10 மாவட்டங்களில் சிறுமிகளை பாதுகாக்க அரசு அசத்தல்

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையின் கீழ், குழந்தைகளின் உளவியல், மனநலம், கல்வி உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த குமரி, கடலூர், கோவை, ஈரோடு, தேனி, வேலூர், தி.மலை உள்பட 10 மாவட்டங்களில் மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவர். இதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறைக்கு <
News February 24, 2025
ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்: 90 நாட்களுக்கு இலவசம்!

கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு புதிய பேக்கை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ சினிமா, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய இரு நிறுவனங்களும் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்துள்ளன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர் இரண்டையும் நேரடியாக காணும் வகையில் ரூ.195-க்கான புதிய பேக் அறிமுகம் செய்துள்ளது. இதில் 90 நாள்களுக்கு ஜியோஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 15GB டேட்டாவும் கிடைக்கும்.