News January 22, 2025
தினம் ரூ.200… முடிவில் ரூ.28 லட்சம் பெறலாம்

தினம் ரூ.200 என்ற அளவில், மாதம் ரூ.6000 முதலீடு செய்தால், ரூ.28 லட்சம் வரை பெறும் Jeevan Pragati திட்டத்தை LIC வழங்குகிறது. 12 – 45 வயதுடையோர் இணையலாம். 12 முதல் 20 ஆண்டு பாலிசி காலம் கொண்ட இத்திட்டத்தில், 20 ஆண்டு முடிவில் சேரும் ரூ.14,40,000 தொகையானது கூடுதல் பெனிபிட்டுகளுடன் சேர்த்து அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை பெறலாம். சேமிப்புடன் லைப் இன்ஷூரன்ஸும் வேண்டுவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.
Similar News
News September 16, 2025
ஆயுத பூஜை விடுமுறை.. செப்.23 முதல் சிறப்பு அறிவிப்பு

<<17708234>>தசரா<<>>, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, செப்.23 – அக்.23 வரை சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல், செப். 28 – அக் – 26 வரை தாம்பரம் – நாகர்கோவில் இடையேயும், செப்.25 – அக்.23 வரை சென்னை – கோவை போத்தனூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News September 16, 2025
காரணம் கண்டறிய முடியாத மர்மமான நிகழ்வுகள்

உலகில் நிகழும் பல அதிசயங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு மர்மமான நிகழ்வுகளுக்கு இதுவரை காரணமே கண்டறிய முடியவில்லை. மேலே, அவற்றை போட்டோக்களாக இணைத்து இருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதுபோன்று வேறு ஏதேனும் மர்மமான நிகழ்வு உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க!
News September 16, 2025
WFH to Weekend தலைவரான விஜய்: தமிழிசை

Work from home தலைவராக இருந்த விஜய், தற்போது Weekend தலைவராக மாறியுள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும், பரப்புரை சென்ற இடங்களில் விஜய்க்கு வந்தது, அவரை பார்க்க வந்த கூட்டமா (அ) வாக்களிக்கும் கூட்டமா என்பது இனிதான் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விஜய்யின் மாநாட்டில் கூடிய கூட்டம் ரசிகர்கள் கூட்டம், தொண்டர்கள் அல்ல என்று தமிழிசை கூறியிருந்தார்.