News January 4, 2025

PF பென்ஷன்: ரூ.1,570 கோடி செட்டில்மெண்ட்

image

PF பென்ஷனுக்கான ஒருங்கிணைந்த பேமெண்ட் அமைப்பை மத்திய தொழிலாளர் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பிஎப் ஓய்வூதியம் பெறும் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளுக்கு, டிசம்பர் மாதத்துக்கான பென்ஷன் தொகையாக மொத்தம் ரூ.1,570 கோடியை அனுப்பியுள்ளது. புதிய சேவையின் மூலம், நாட்டின் எந்த வங்கியிலும் பென்ஷன் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதனால் பென்ஷன்தாரர்களின் அலைச்சல் குறையும்.

Similar News

News September 15, 2025

‘தமிழ்நாடு’ அடையாளம் கொடுத்த தலைவன்!

image

திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்க விதை போட்ட பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று. தாய்த்திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டுவர், மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் கட் அண்ட் ரைட்டாக கூறினார். பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு இருக்கும் வரை தமிழ்நாடு என்றைக்கும் அண்ணாவை மறக்காது! உங்களுக்கு அண்ணா என்றால் நினைவுக்கு வருவதென்ன?

News September 15, 2025

‘மறப்போம், மன்னிப்போம்’ .. செங்கோட்டையன்

image

எம்ஜிஆர், ஜெ.,வின் உண்மையான விசுவாசிகள் ஒன்றாக இருந்தால்தான் 2026-ல் அதிமுக வெற்றி பெறும் என்று செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற அண்ணாவின் பொன் எழுத்துகளை நினைவூட்ட விரும்புவதாகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து புரிய வேண்டியவர்களுக்கு (இபிஎஸ்) புரிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News September 15, 2025

இந்திய வீரர்களின் செயல் வருத்தமளிக்கிறது: PAK Coach

image

PAK வீரர்களுக்கு கைகொடுக்காமல் இந்திய வீரர்கள் சென்ற பின், பாக்., கேப்டன் சல்மானும் போட்டிக்கு பின் கொடுக்க வேண்டிய பேட்டியை புறக்கணித்தார். இதற்கான காரணத்தை பாக்., பயிற்சியாளர் ஹெஸனிடம் கேட்டபோது, போட்டியில் தோல்வியடைந்ததால் சல்மான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்தார். மேலும், இந்திய வீரர்களின் செயல் ஏமாற்றமளிப்பதாகவும், ஒரு போட்டியை முடிப்பதற்கு இது சரியான வழி இல்லை எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!