News February 15, 2025
வங்கிக் கணக்கில் ரூ.15,000… இன்றே கடைசி

முதன் முதலாக வேலைக்கு சேருபவர்களுக்காக ELI (Employee Linked Incentive Scheme) திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் பயன்பெற, PF கணக்கின் UAN-ஐ ஆக்டிவேட் செய்து, வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கு இன்றே(பிப்.15) கடைசி நாளாகும். இதை செய்தால் தான், ஒரு மாதச் சம்பளம் (Max ரூ.15,000) 3 தவணைகளில் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தவறவிட்டவர்கள் உடனே செய்யவும்.
Similar News
News December 5, 2025
நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பொழியுதா? கமெண்ட் பண்ணுங்க
News December 5, 2025
ராசி பலன்கள் (05.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 5, 2025
பிரம்மாண்டமாக பிரகாசிக்கும் கடைசி முழுநிலவு

2025-ம் ஆண்டின் கடைசி முழுநிலவு உலகம் முழுவதும் காணப்பட்டு வருகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால், வழக்கமான முழுநிலவை விட பிரம்மாண்டமாக பிரகாசித்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களும், தங்களது போன்களில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்பிறகு 2042 வரை இவ்வளவு நெருக்கமாக நிலவை பார்க்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


