News February 23, 2025
விடுபட்டோருக்கு விரைவில் ரூ.1,000: அமைச்சர் KKSSR

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் சேராமல் உள்ள பெண்கள், அரசு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், விடுபட்டோரில் தகுதியானோருக்கு விரைவில் ரூ.1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
Similar News
News February 23, 2025
ஹேப்பி நியூஸ்… அதிகரிக்கும் வரையாடுகள் எண்ணிக்கை

தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு(Nilgiri Tahr) தான். பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழக – கேரள வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்ட வரையாடுகளை பாதுகாக்க, கடந்த 2023ல் அரசு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
News February 23, 2025
கூகுள் மேப் மூலம் கொள்ளை: ஞானசேகரன் வாக்குமூலம்

கூகுள் மேப் மூலமாக, பள்ளிக்கரணையில் சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 150 சவரன் நகைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீதான திருட்டு வழக்குகள் குறித்த விசாரணையில், இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
News February 23, 2025
மார்ச் 24, 25ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், மார்ச் 3ல் நாடாளுமன்றம் முன் தர்ணா நடத்தவும், மார்ச் 24, 25ல் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.