News January 24, 2025

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000… இன்றே கடைசி

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆவது பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழித் தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தேசிய வருவாய் வழித் தேர்வு பிப். 22இல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்றைக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News January 7, 2026

பள்ளி வாகனம் மீது டெம்போ மோதி விபத்து

image

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பகுதியில் நேற்று மாலை பள்ளி வாகனமும் டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

image

கரூர் துயரில் <<18762471>>நயினாரின்<<>>
குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் கூறிய இடத்தில் விஜய்யின் வாகனத்தை நிறுத்தாதது, மாற்றுப்பாதையில் சென்றது பற்றி நயினார் பேசவில்லை என்றும், நடந்தவை குறித்து தெரியாமல் குறுகிய மனப்பான்மையுடன் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

News January 7, 2026

சேலையில் மிளிரும் ‘சிங்காரி’ ❤️❤️

image

‘றெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை மச்சான்’ என்ற வசனத்திற்கு நடிகை மமிதா பைஜூ உயிர் கொடுத்திருக்கிறாரா என தோன்றுகிறது. இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த ரீசண்ட் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். வண்ணச் சேலையில் மின்னும் பூவாய் க்யூட்டான ரியாக்‌ஷன் கொடுக்கும் ‘விஜய்யின் ரீல் மகள்’ மமிதாவின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் பாருங்க!

error: Content is protected !!