News April 21, 2025

HIV பாதித்த குழந்தைகளுக்கும் மாதம் ரூ.1,000: அமைச்சர்

image

தமிழ்நாட்டில் HIV பாதித்த குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், தமிழ்நாட்டில் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகள், HIV தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறினார்.

Similar News

News November 7, 2025

பிரபல பாடகி சுலக்‌ஷனா மாரடைப்பால் உயிரிழப்பு

image

பழம்பெரும் பாடகி சுலக்‌ஷனா பண்டிட் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரில் 1954-ல் பிறந்த இவர் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களை பாடியது மட்டுமில்லாமல், 25-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். 1967-ல் தக்தீர் படத்திற்காக லதா மங்கேஷ்கருடன் இணைந்து சுலக்‌ஷனா பாடிய பாடல் மிகப்பிரபலம். இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகம், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP..

News November 7, 2025

விஜயகாந்த் செய்த தவறை செய்ய மாட்டேன்: சீமான்

image

கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை, தான் நிச்சயம் செய்ய மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். தனித்து நின்று 10 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த், கூட்டணி வைத்த பிறகே அது குறைந்ததாக அவர் கூறியுள்ளார். அரசியலில் மாற்று என்று கூறிவிட்டு அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றம் ஏற்படாது என்றும், தனித்து நின்றே நாதக ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சீமான் பேசியுள்ளார்.

News November 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 512 ▶குறள்: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. ▶பொருள்: பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

error: Content is protected !!